கள விசாரணை நடத்தி, உண்மையான பட்டியல் பழங்குடி சமூகச் சான்றிதழ்களை மாநில அளவிலான ஆய்வுக் குழுவிடம் சமர்பிப்பதற்காக, சென்னை, திருச்சி, சேலம் மற்றும் மதுரை மண்டலங்களில் நான்கு விஜிலென்ஸ் பிரிவுகள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. மேலும், நிலுவையில் உள்ள 3,251 பழங்குடியினர் சமூகச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் தலைமையில் 38 சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் அதிகாரிகள் கொண்ட பிரிவினர் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.